திருவள்ளூரில் வேகம் எடுக்கும் கொரோனா: 14 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்து இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முன்பை விட படு வேகமாக அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் ஓரளவு கொரோனா பரவல் குறைந்திருக்க, மற்ற மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, நெல்லை என பல மாவட்டங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,161 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 240 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 3,944 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9,978 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

கார்ட்டூன் கேலரி