141-வது பிறந்தநாள்: தந்தை பெரியார் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

சென்னை:

ந்தை பெரியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ம் தேதி அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும், அரசு மரியாதை செலுத்தி வருகிறது. இதையொட்டி சென்னை அண்ணாசாலையில் சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

சிலையில் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப் படத்திற்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு பெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில்,  சுயமரியாதை – பகுத்தறிவு – சமூகநீதி – மொழியுரிமை – இன உணர்ச்சி ஆகிய ஐந்தின் விதைநெல்லாம் அய்யா பெரியாரின் பிறந்தநாள். தத்துவமாய் எங்களை இயக்கும் உங்கள் சொற்களையே ஆயுதங்களாகக் கொண்டே போராடுகிறோம் அய்யா! பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல்! வெல்வோம்!வாழ்க பெரியார்! என்று கூறி உள்ளார்.