திருவண்ணாமலையில் ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா: பாதிப்பு 2496 ஆக அதிகரிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடக்கத்தில் சென்னை அதிகளவு காணப்பட்ட கொரோனா தொற்று இப்போது மற்ற மாவட்டங்களிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் அதிக கொரோனா தொற்றுகள் இருக்கின்றன.

இந் நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 58 பெண்கள், 8குழந்தைகள், 6 சுகாதார பணியாளர்கள் ஆவர்.

இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,496 ஆக அதிகரித்துள்ளது. இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.