டில்லி:

கடந்த 2014ம் ஆண்டு முதல் 143 விஞ்ஞாணிகள் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (டிஆர்டிஓ) இருந்து விலகி இருப்பதாக அருண்ஜெட்லி தெரிவித்தார்.

லோக்சபாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி எழுத்துப்பூர்வ பதிலுரையை நேற்று தாக்கல் செய்தார்.

அதில் ‘‘ டிஆர்டிஓ.வில் இருந்து விஞ்ஞாணிகள் வெளியேறுவது அதிகரித்து வருவதாக கூறும் புகார்களை ஏற்க முடியாது. அவை ஆதாரமற்றவை. 2014ம் ஆண்டில் 41 பேரும், 2015ம் ஆண்டில் 42 பேரும், 2016ம் ஆண்டில் 45 பேரும், 2017ம் ஆண்டில் 15 பேர் மட்டுமே ராஜினாமா செய்துள்ளனர்’’ என்றார்.

மேலும், அதில்,‘‘கடந்த 4 ஆண்டுகளில் 143 பேர் மட்டுமே ராஜினாமா செய்துள்ளனர். மொத்த எண்ணி க்கையில் இது 1 சதவீதம் மட்டுமே. 2016&17ம் ஆண்டில் ராணுவத்துக்கு 50 ஆயிரம் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்கள் வாங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மூலம் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 138 புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்கள் வாங்கப்பட்டுள்ளது.

மேலும், ராணுவ வீரர்களுக்கான தலை கவசம் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 279 வாங்க கடந்த டிசம்பரில் ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. வரும் செப்டம்பர் 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை நேபாளில் இரு நாடுகளு க்கு இடையிலான கூட்டு ராணுவ பயிற்சி நடக்கிறது’’ என தெரிவித்துள்ளார்.

மற்றொரு கேள்விக்கு அவர் அளித்திருந்த பதிலுரையில்,‘‘கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி வரை இலங்கை கடற்படையினரால் 215 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 200 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.