ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பிரசல வலி ஏற்பட்ட இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து மருத்துவமனைக்கு சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

6 கி.மீ தூரம் நடந்து சென்று குழ்ந்தைப் பெற்ற பெண்

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் வீட்டுச்சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள நிலை உருவாகி உள்ளது. முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டனர். காஷ்மீர் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ஆட்டோ, பேருந்துகள் கடுப்படுத்தப்பட்டன.  மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கர்ப்பிணி ஒருவர் 6 கிலோமீட்டர் நடந்து சென்று மருத்துவமனையில் குழந்தைப் பெற்ற அவலம் அரங்கேறியுள்ளது.  ஸ்ரீநகரைச் சேர்ந்த இன்ஷா அஷ்ரஃப் என்ற 26 வயது கர்பிணி, 144 தடை உத்தரவால் பிரசவ வலியுடன் 6 கிலோ மீட்டர் நடந்தே சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவல செய்தி வெளிவந்துள்ளது.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், கர்ப்பிணியான இன்ஷாவுக்கு அதிகாலை 5.30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதாகவும், ஆனால், அந்த நேரத்தில், அவருடன், அவர் தாயார் மற்றும் சகோதரி மட்டும் இருந்தனர். அவர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஆட்டோ ஒன்றை அழைத்து, அதில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டதாகவும், ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த ராணுவத்தினர்  ஆட்டோவை இயக்க அனுமதி மறுத்து விட்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இதனால், கர்ப்பிணியான இன்ஷாவும் தாங்களும், வேறு வழியின்றி பிரசவ வலி நடந்து சென்றதாகவும், போகும் வழியில் பலமுறை தங்களை ராணுவத்தினர் சோதனை செய்தனர் என்றும் தெரிவித்து உள்ளனர்.

ஒரு கட்டத்தில் பிரசவ வலி தாங்க முடியாத இன்ஷா ரோட்டிலேயே மயங்கி விழுந்த நிலையில், அருகில்  இருந்த தனியார் மருத்துவமனை ஊழியர்கள், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மருத்துவமனையில் அனுமதித்து பிரசவம் பார்த்தனர். அங்கு இன்ஷாவுக்க குழந்தை பிறந்தாகவும் கூறி உள்ளனர்.

மேலும்,  தொலைத்தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டதால், குழந்தை பிறந்த விஷயம் கூட இன்ஷாவின் கணவருக்கு தெரிவிக்க  முடியாத நிலை நீட்டித்து வருவதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த அவல சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.