சென்னை,

சென்னை மெரினாவில் கடற்கரை பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமல் 15 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும்.

மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காவல்துறை கூடுதல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டு உள்ளார்.

மெரினா கடற்கரை பகுதிகளான  அண்ணாசதுக்கம், திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ், பட்டினப் பாக்கம் பகுதிகளில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த தடை உத்தரவு  பிப்ரவரி 12-ம் தேதி வரை 15 நாட்கள் நீடிக்கும்.

இதன் காரணமாக மெரினாவில் போராட்டம் நடத்தவோ, உண்ணாவிரதம், போராட்டம், பேரணி, மனிதச் சங்கிலி எதுவும் நடத்த அனுமதி இல்லை காவல் துறை அறிவித்துள்ளது.

ஆனால்,  நடைபயிற்சிக்காக வருபவர்களுக்கு தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.