144 தடை: சபரிமலை பகுதியில் மேலும் மூன்று நாட்களுக்கு நீடிப்பு

பம்பா:

பரிமலைக்கு இளம்பெண்கள் வர முயற்சிக்கும் நிலையில் சபரிமலை பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்த 144 தடை உத்தரவு மேலும் 3 நாளைக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது., இந்த உத்தரவை நீடித்து பத்தனம்திட்டா ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

சபரிமலை பகுதிகளான பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவங்கல் ஆகிய இடங்களுக்கும்  144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்   சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என   தீர்ப்பு வழங்கிய நிலையில், அய்யப்பன் கோவிலுக்குள்  10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் வர பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் தந்திரிகள் உள்பட அய்யப்ப பக்தர்கள், கேரள மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டதை  அடுத்து பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், அவர்களை கோவிலுக்கு வர விடாமல் ஆங்காங்கே பக்தர்கள் தடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது. காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.

இதன் காரணமாக ஏற்கனவே சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 22ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்கும் வகையில்  தற்போது அமலில் உள்ள144 தடை உத்தரவை  நீட்டிக்குமாறு பத்தனம்திட்டா மாவட்டகாவல்துறை சார்பில்  கேட்டுக் கொள்ளப்பட்டது

இதையடுத்து,சபரிமலையைச்  சுற்றியுள்ள பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் பகுதிகளில்  அமலில்  உள்ள  தடை உத்தரவை மேலும் 3 நாட்களுக்குநீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.