தூத்துக்குடி

லவரம் காரணமாக தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடக் கோரி போராட்டம் நிகழ்ந்ததால் 144 தடை உத்தரவு போடப்பட்டது.   தடையை மீறி கூடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் 13 பேர் மரணம் அடைந்தனர்.   இதனால் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.   மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தற்போதைய ஆட்சியரான சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி உள்ளதால் 144 தடை உத்தரவை நீக்கி உள்ளார்.   நேற்று நள்ளிரவு புதுக்கோட்டை பகுதியில் பேருந்து மீது கல்வீச்சு நடைபெற்றதால் பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.   தற்போது மீண்டும் வழக்கம் போல் பேருந்து சேவைகள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் பேடி, “தற்போது தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப தொடங்கி உள்ளது. இதனால் ஆட்சியர் 144 தடை உத்தரவை நீட்டிக்கவில்லை.   முழுகையான இயல்புநிலை திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  விரைவில் காவல்துறையினர் படிப்படியாக குறைக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.