நியூசிலாந்து கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

--

நியூசிலாந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்தபடி கரை ஒதுங்கியது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள தீவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தான் ஸ்டீவர்ட் தீவு. கடந்த சனிக்கிழமை இந்த தீவில் சுமார் 145 பைலைட் இன திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின.

whales

திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியையும், கவலையும் அடைந்தனர். இதையடுத்து திமிங்கலங்களின் உடலை ஆய்விற்கு அனுப்பப்பட்டு அவை இறந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு அதே தீவில் பல திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழல் மாசடைதல், இயற்கை பேரிடர், புவியியல் அம்சங்களின் மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் அதிகளவில் இறப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.