24 மணிநேரத்தில் 14,516 பேர்: இந்தியாவில் 4 லட்சத்தை எட்டும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை….

டெல்லி:

ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14516 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது.  இந்தியாவில் பாதிப்பு 3,95,048 -ஆக உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கையும் 12,948 ஆக அதிகரித்து உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 3,80,532-லிருந்து 3,95,048-ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,573-லிருந்து 12,948-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,04,711-லிருந்து 2,13,381-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 375 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 14,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 9-ஆவது நாளாக பெரிய அளவில்14,516 -க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,68,269 போ் சிகிச்சையில் உள்ளனா். 2,13,831 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா்.