இந்தோனேசியாவில் 146 வயது தாத்தா மரணம்

ஜாவா:

உலகத்திலேயே இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் அதிக வயதானவராக கருதப்பட்ட 146 வயது சோடிமெட்ஜோ இந்தோனேசியாவில் மத்திய ஜாவாவில் உள்ள தனது கிராமத்தில் மரணமடைந்தார்.

சோடிமெட்ஜோ 1870ம் ஆண்டு டிசம்பரில் பிறந்தவர் என்று ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது

ஆனால், இந்தோனேசியாவில் 1900ம் ஆண்டில் தான் பிறப்புப் பதிவு நடைமுறை தொடங்கப்பட்டது. அதனால் அதற்கு முந்தைய ஆவணங்களில் தவறுகளும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

எனினும் சோடிமெட்ஜோ அளித்த ஆவணங்களின் அடிப்படையில் அவரது வயது 146 என்பது உண்மை என்று அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். மேலும் இவர் கூறிய தகவல்களின் அடிப்படையிலும் அவரது வயது 146 என்பது ஏற்க கூடியதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி