14வது ஆசியன் மாநாடு:  மியான்மர் ஆங் சான் சூகியுடன் மோடி சந்திப்பு!  

லாவோஸ்:

14வது ஆசியன் மாநாட்டில் கலந்துகொள்ள லாவோஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு மியான்மர் நாட்டு ஆலோசகர் ஆங்சான் சூகியை சந்தித்து பேசினார்.

லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியான் மாநாடு மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு இன்று ஆரம்பமானது.

மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மோடி,  மாநாட்டிற்கு இடையே மியான்மர் நாட்டின் சிறப்பு ஆலோசகர் ஆங் சான் சூகியை சந்தித்து இந்தியா-மியான்மர் இடையிலான உறவுகள் குறித்து ஆலோசனை செய்தார்.

1aaang-modi

மேலும் இந்தியா-மியான்மர் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியாளர்கள் நடத்தும் போராட்டம் ஆகியவை குறித்து இருவரும் பேசியதாகவும்,

மேலும் பால் உற்பத்தி, விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் பருப்பு வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் குறித்தும் இருவரும் பேசியதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் முடிவில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஆங் சான் சூகி, விரைவில் இந்தியா வரவிருப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஜப்பான் அதிபர் ஷின்ஸா அபே ஆகியோரை மோடி சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.