15/05/2020 கொரோனா பாதிப்பு:  சென்னை மாநகராட்சி மண்டலவாரி பட்டியல்

சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில்  5,637 போ பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை  44 போ உயிரிழந்ததுள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம், திருவிநகர், தண்டையாா்பேட்டை,   கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகா், வளசரவாக்கம், அம்பத்தூா் மற்றும் அடையாறு போன்ற  9 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு  தீவிரமாக உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  4500க்கு மேல் உள்ளது. அதாவது 80 சதவிகிதம் பேர் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்தான்.
கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 600க்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நேற்று (14ந்தேதி) பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

ராயபுரம் 12

அண்ணா நகா் 8

திருவிக நகா் 7

தண்டையாா்பேட்டை 4

தேனாம்பேட்டை 4

கோடம்பாக்கம் 3

அடையாறு 3

வளசரவாக்கம் 1

பிற மாவட்டத்தைச் சோந்தவா் 1

மொத்தம் 44

பாதிப்பு மண்டல வாரியாக பட்டியல்..

அதிகபட்சமாக ராயபுரத்தில் 971 பேரும், கோடம்பாக்கத்தில் 895 பேரும், திரு.வி.நகர்7 699 பேர் உள்பட மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5637 ஆக உள்ளது.

You may have missed