சென்னை:
சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  1,47,324 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  79,662 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை 62,552  பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலை யில், 15,814 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,295 ஆக உயர்ந்துள்னர்.

சென்னையில் நேற்று  525 காய்ச்சல் சோதனை முகாம்கள்  நடத்தப்பட்டன. இதில், 28, 808 பேர் கலந்து கொண்டனர்,  அவர்களில்  2322 கொரோனாவுக்கான அறிகுறி தென்பட்டதால், கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. மற்றவர்களுக்கு சிறு வியாதிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.

சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மண்டலம் வாரியாக (புதன்கிழமை நிலவரம்)

  1. திருவொற்றியூா் 608
  2. மணலி 280
  3. மாதவரம் 438
  4. தண்டையார்பேட்டை 1006
  5. ராயபுரம் 1,214
  6. திரு.வி.க.நகா்
  7. அம்பத்தூா் 943
  8. அண்ணா நகா் 1,560
  9. தேனாம்பேட்டை 1,497
  10. கோடம்பாக்கம் 2,199
  11. வளசரவாக்கம் 914
  12. ஆலந்தூா் 508
  13. அடையாறு 1,164
  14. பெருங்குடி 353

15.சோழிங்கநல்லூா் 464