15/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை:

மிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 4,496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான தால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 5,000 பேர்  குணமடைந்ததார், இதுவரை கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,02,310 ஆக அதிகரித்துள்ளது. , தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது.

அதிபபட்சமாக சென்னையில்,  இன்று ஒரே நாளில் 1,291 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  80,961 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சென்னையில் இன்று 23 பேர் உள்பட மொத்த பலி  எண்ணிக்கை 1,318 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு மொத்த விவரம்:

சென்னையில் 80,961 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 1,591 பேருக்கும் திண்டுக்கல்லில் 1,066 பேருக்கும் திருநெல்வேலியில் 2,098 பேருக்கும், ஈரோட்டில் 460, திருச்சியில் 1,814 பேருக்கும், நாமக்கல் 212 மற்றும் ராணிப்பேட்டை 1,711, செங்கல்பட்டு 8,741, மதுரை 7,331, கரூர் 210, தேனி 1,975 மற்றும் திருவள்ளூரில் 7,573 பேருக்கு, தூத்துக்குடியில் 2,766, விழுப்புரத்தில் 1,820பேருக்கும், கிருஷ்ணகிரியில் 306 பேருக்கும், திருவண்ணாமலையில் 3,349, தருமபுரியில் 264 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் திருப்பூரில் 342, கடலூர் 1,624, மற்றும் சேலத்தில் 2,053, திருவாரூரில் 795, நாகப்பட்டி னம் 388, திருப்பத்தூர் 478, கன்னியாகுமரியில் 1,745 மற்றும் காஞ்சிபுரத்தில் 4,255பேருக்கும், சிவகங்கை 1,103 மற்றும் வேலூரில் 3,191 பேருக்கும், நீலகிரியில் 277 பேருக்கும், தென்காசி 842, கள்ளக்குறிச்சியில் 1,979 பேருக்கும், தஞ்சையில் 809, விருதுநகரில் 2,603, ராமநாதபுரத்தில் 2,053 பேருக்கும், அரியலூர் 585 மற்றும் பெரம்பலூரில் 181பேருக்கும், புதுக்கோட்டையில் 780 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,466பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.