வெறும் 13ஆயிரம் கோடி பணம் மட்டுமே திரும்ப வரவில்லை: ரிசர்வ் வங்கி

டில்லி:

ணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்குப் பிறகு நாட்டின் மொத்த பணப்புழக்கத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15,44,000 கோடி ரூபாய் என மத்திய அரசு கூறிய நிலையில், தற்போது பழைய நோட்டுக்கள் அனைத்தும் எண்ணப்பட்டு விட்ட நிலையில் 15,31,000 கோடி ரூபாய் திரும்ப வந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதில் பெறும் 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரும்ப வராதது தெரிய வந்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ந்தேதி இரவு, நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் பிரதமர் மோடி. உயர் மதிப்புடையே ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தினார்.

பெரும் பணக்காரர்களிடம் உள்ள  கருப்பு பணத்தை ஒழிக்கவும், பயங்கரவாதிகளின் நடவடிக்கைகையை ஒடுக்கவுமே  இந்த நடவடிக்கை என்று பிரதமர் மோடி மக்களிடம் தெரிவித்தார்.

ஆனால், அவர் அறிவித்தபடி  கருப்புப்பணம் ஒழியாமல், பொதுமக்களே பணமதிப்பிழப்பு காரணமாக கடுமையான பாதிப்புகளை எதிர் கொண்டனர்.

மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து  2ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. வரும்  நவம்பர் 8-ம் தேதியுடன்  இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில், தற்போது இந்திய ரிசர்வ் வங்கி, பொதுமக்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் குறித்து இறுதி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 15.31 பில்லியன் பணம் திரும்ப வந்துள்ளதாக கூறி உள்ளது.

ஏற்கனவே பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய்கள் மதிப்பு 15,44,000 கோடி  என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம்  ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் 15,28,000 கோடி ரூபாய், அதாவது 99 சதவீதம் திரும்ப வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த நிலையில், தற்போது 15,31,000 கோடி பணம் திரும்ப வந்துள்ளதாக கூறி உள்ளது.

அதாவது, பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் ரூ.13 ஆயிரம் கோடி ரூபாய் இன்னும் திரும்ப வரவில்லை என்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது. 

அப்படியென்றால் திரும்ப வராத இந்த பணம்  அனைத்தும் வெள்ளையாக மாற்றப்பட்டு மறுபடியும் புழக்கத்தில் இருப்பதாகவே கருதப்படுகிறது.

13,000 கோடியான ரூபாய் கருப்புப் பணம் என்று சொல்லும் மத்திய அரசு 1 சதவீத பணத்திற்காக 99 சதவீத பணத்தை செல்லாதது என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி  அறிவித்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பணமதிப்பு நீக்கத்தின் முக்கியமான இலக்கில் அடுத்தது கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிப்பது. 2015-ம் ஆண்டு தேசிய புலனாய்பு அமைப்பு (என்ஐஏ) வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவித்தது.

அதாவது மொத்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் 0.028 சதவீதம் கள்ளநோட்டுகளாக உள்ளன. அதிலும் குறிப்பாக உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளே அதிகம் கள்ளநோட்டுகளாக உள்ளன என்று என்ஐஏ கூறியது.

ஆனால் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு வங்கிக்கு திரும்பிய 1,000 ரூபாய் நோட்டுகளில் 0.0007 சதவீதம் மட்டுமே கள்ள நோட்டுகள். 500 ரூபாய் நோட்டுகளில் சுமார் 0.002 சதவீதம் மட்டுமே கள்ளநோட்டுகள். மொத்த கள்ளநோட்டுகள் புழக்கத்தில் மிக குறைவான சதவீதமே வந்துள்ளது. மீதி என்ன ஆனது என்பதை மத்திய அரசு விளக்க வில்லை.

கருப்பு பணத்தை ஒழிப்பதாக மார்தட்டிக்கொண்ட மோடி, தற்போது ரிச்ர்வ் வங்கி வெளியிட்டுள்ள பணமதிப்பிழப்பு காரணமாக திரும்ப பெறப்பட்ட பணம் குறித்த  இறுதி அறிக்கையின் வாயிலாக,  பணமதிப்பிழப்பு  சாமானிய மக்களுக்கு பயன் அளிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

ஆனால் மோடி அரசோ, இந்த உண்மைகளை மறைத்து விட்டு ஏதோ சாதனை செய்ததாக கூறி பெருமிதப்படுகிறது. ஒளிவு மறைவுகளுடன் கூடிய தெளிவற்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பலன் பெற்று வருவது நிழல் பொருாளாதாரமே என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

கவர்ச்சி வசனங்களால் வாக்காளர்களை  கவர்ந்து வரும் பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்புக்கு பிந்தைய நடவடிக்கைகளால் நாட்டில் எந்தவித  ன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

You may have missed