சென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…

சென்னை:

சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர்.  கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

சென்னையில்  கடந்த ஒருவாரமாக  கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. சென்னையில்  நேற்று 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 79,662 ஆக அதிகரித்துள்ளது. நேற்று  ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,295 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 10 மணி வரை இடைப்பட்ட 16 மணி நேரத்தில் மேலும் 15 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 2 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும்  தனியார் மருத்துவமனையில் 2 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.