சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ₨15 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது  போக்குவரத்துத்துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இரவு முடக்கம் மற்றும் ஞாயிறன்று பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இரவு போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில், அனைத்து அரசு பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவிப்பு  வெளியிடப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அரசு போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி,  தமிழகத்தில்  70 ஆயிரம் அரசு பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றவர், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தடுப்பூசி கட்டாயமில்லை என்று தெரிவித்தார்.

மேலும்,  “இரவில் அரசு பஸ்கள் ஓடாததால் 12 கோடி ரூபாய் முதல் 15 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும்,  இரவு லாக்டவுன் முதல்நாளான நேற்று 16 ஆயிரம் பேருந்துகள் பகலில் இயக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.