15 நாள் திண்டுக்கல் பூட்டு வாங்கி தமிழ்நாட்டைப் பூட்டுங்க…

நெட்டிசன்:

ந.முத்துராமலிங்கம் – வாட்ஸ்அப் பதிவு…

bty

கோயம்பேடு சந்தையில் 38 பேருக்குக் கொரோனா –

விக்கறவனே 38 பேர்னா வாங்குனவனுங்க எத்தனை பேருக்கு வந்திருக்குமோ?-

பேராபத்தில் தான் சென்னை இருக்கிறது –

இருக்கறத சாப்பிட்டுட்டு வீட்ல இருங்கடான்னா எவன் கேக்கறான்?-

இரண்டு வகை குழம்பு நான்கு வகை கூட்டு, அப்பளம், போதாததுக்கு குர்குரே வேற வேணும்னு ஒருத்தன் Bill போடறான் –

பஞ்ச காலத்துல மக்கள் ஒரே ஒரு பருக்கை சோறு கூட இல்லாம செத்துப் போனதை எடுத்துச் சொல்லியும் கூட திருந்தலன்னா என்னதான் செய்ய முடியும்? –

நடக்கறது உலகப் பேரழிவு, ஒருவேளை நீ பட்டினியா இருந்து பசியோட செத்தா கூட அது உன்னை மட்டும்தான் பாதிக்கும்-

ருசியாத்தான் சாப்பிடுவேன்னு பிடிவாதமா வெளியில சுத்திகிட்டுத் திரிஞ்சா அது உன்னோட குடும்பத்த மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குழி தோண்டிப் புதைச்சிடும்-

திரும்பவும், சொல்றேன் இருக்கறத, வீட்டுக்குப் பக்கத்துல கெடைக்கறதத் தின்னுட்டு உயிரை மட்டும் காப்பாத்திக்கங்கஉயிரோட இருந்தா அப்பறம் விதம்விதமா சாப்பிடலாம் –

#அரசாங்கத்துக்கு, தயவு செஞ்சி உள்ளே வெளியே விளையாடாம எல்லாத்தையும் ஒரு பதினைஞ்சி நாள் இழுத்து மூடுங்க-

ஒரே ஒரு கடைகூட தெறந்து இருக்கக் கூடாது, ஏழை பணக்காரன் எல்லா இவனையும் அரசாங்கம் குடுக்கற அரிசிய மட்டும் தேவைனா சாப்பிடட்டும் –

தெருக்கல்ல வந்து வியாபாரம் செஞ்சிகிட்டு இருந்த வியாபாரிகள ஒருங்கினைச்சு முடிஞ்சவரைக்கும் மக்களுக்கு வீடுகளுக்கே அத்தியாவசியப் பொருட்கள் மட்டும் கிடைக்க ஏற்பாடு பண்ணுங்க –

அவங்க மூலமே ரேஷன் பொருட்களையும் கிடைக்க ஏற்பாடு பண்ணுங்க –

ஊருக்கு 10 டாஸ்மாக் பணியாளர்கள் சும்மாதான இருக்காங்க அவங்களோட ரேஷன் கடை ஊழியர்களையும் சேத்து இந்த வேலைகளச் செய்யுங்க –

ஒவ்வொரு ஊர்லயும் குப்பை கொண்டுவர்ற தள்ளுவண்டியக் கூட நல்லாக் கழுவி, மருந்து அடிச்சி இந்த வேலைக்கு யூஸ் பண்ணிக்கோங்க –

இப்பப் பரவல் அதிகமா இருக்கற சென்னைல இருந்து ஒரு ஈ, எறும்பு கூட வெளியேற முடியாதபடி பூட்டப் போடுங்க –

இப்பத்தான் 35 மாவட்டங்கள்ள நாலு நாளா ஒரே ஒரு புது நோயாளி கூட வராம இருக்கு, சென்னைல இருந்து மக்களோட சேத்து கொரோனாவையும் வெளியேத்தி எல்லா மக்களையும் கொன்னுடாதீங்க –

கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகள்ல கடுமையா இருங்க, தன்டையார்பேட்டைல தெறந்து விட்டு அந்த மக்கள் கிட்டயே பொருப்பக் கொடுத்தா மாதிரி செய்யாதீங்க –

உங்களால முடியலன்னா இரானுவத்தக் கூப்பிடுங்க –

கைமீறிப் போனபிறகு இதத்தான செய்யப் போறீங்க? –

இப்பவே முழுமையான லாக்டவுன் செஞ்சா சீக்கிரமே வெளில வந்துடலாம் –

15 நாள் திண்டுக்கல் பூட்டு வாங்கி தமிழ்நாட்டைப் பூட்டுங்க –

அதுக்கும் முன்னாடி பத்துப் பூட்டு வாங்கி தமிழக ஊடகங்களப் பூட்டுங்க –