இந்த ஆண்டில் 15லட்சத்து 36ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்படும்! செங்கோட்டையன்

சென்னை:

மிழகத்தில் இந்தாண்டு 15 லட்சத்து 36 ஆயிரம் விலையில்லா மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட  இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது பயலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றன .

இந்தாண்டு மட்டும் 15 லட்சத்து 36 ஆயிரம் இலவச மடிக்கணினிகள்  மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாது , அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார் .