சென்னை

மிழகத்தில் இதுவரை 15 லட்சம் வெளிநாட்டவர் சிகிச்சைக்காக வந்துள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று உலகத் தமிழ் வர்த்தகச் சபையின் சார்பில் சிறப்பான மருத்துவ சேவை அளித்தவகளுக்கு  விருதுகள் வழங்கப்பட்டன.    இந்த விழாவில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அந்த மருத்துவமனையின் தலைவர் வி சாந்தாவுக்கு வழங்கப்பட்டது.    அத்துடன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை,  இதய அறுவை சிகிச்சை நிபுணர் பாலகிருஷ்ணன் உள்ளிடா 15 பிரிவை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.    அப்போது அவர், “நோய்களை கண்டறிதல் மற்றும் சிகிச்சையில்  தமிழகம் முதல் இடம் வகிக்கிறது.   இந்தியாவில் மருத்துவத்துக்காக வரும் வெளிநாட்டவர்களில் சுமார் 40% பேர் தமிழகத்துக்கு வருகின்றனர்.    இதுவரை 15 லட்சம் வெளிநாட்டவர்கள் சிகிச்சை பெறவும் நோய்களை கண்டறியவும் தமிழகத்துக்கு வந்துள்ளனர்.

தமிழகத்தில் சிறந்த மருத்துவ சேவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவதால் வெளிநாட்டவர் தமிழகத்துக்கு வர பெரிதும் விரும்புகின்றனர்.   அலோபதி மட்டுமின்றி பாரம்பரிய சிகிச்சை முறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது” என கூறினார்.   இந்த விழாவில் ஆளுநருடன் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.