பல்கேரியா பஸ் விபத்தில் 15 பேர் பலி

சோபியா:

பல்கேரியா நாட்டின் தலைநகர் சோபியாவின் இஸ்கார் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. வளைவில் திரும்பும் போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இதில் பஸ் பயணிகள் 15 பேர் சம்பவ இடத்தில் பலியாயினர். காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உளளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.