மோடிக்கு எழுப்பப்பட்ட 15 கேள்விகள் : 13, 14 மற்றும் 15

டில்லி

டகங்கள் பிரதமர் மோடிக்கு எழுப்பிய 15 கேள்விகள் வரிசையில் இன்று 13, 14 மற்றும் 15


பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது இல்லை. குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு தனிப்பட்ட பேட்டியில் மட்டும் அவர் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதை ஒட்டி ஊடகக்கள் அவருக்கு 15 கேள்விகள் எழுப்பி இருந்தன.

அந்த வரிசையில் இன்று 13, 14 மற்றும் 15 ஆம் கேள்விகள் இதோ :

13. ஆரம்ப காலத்தில் நீங்கள் அமெரிக்க அதிபர் டிரம்புடனும் அமெரிக்காவுடனும் மிகவும் நெருக்கம் காட்டி வந்தீர்கள். ஆனால் சமீப காலமாக நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் இருந்து விலகி ரஷ்யாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறீர்கள். நீங்கள் இவ்வாறு விலக காரணம் என்ன? டிரம்பின் சௌதி அரேபியா, ஈரான், இஸ்ரேல், பாலஸ்தீனம் குறித்த கொள்கை முடிவுகளால் இந்தியாவுக்கு ஏதும் அபாயம் உண்டாகலாம் என நினைக்கிறீர்களா? அல்லது இந்த நாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்களின் நலம் கருதி அமெரிக்காவுடன் இருந்து விலகுகிறீர்களா?

14. நீங்கள் குஜராத் முதல்வராவதற்கு முன்பு அதாவது 2000 வருடத்தின் போது அளித்த ஒரு பேட்டியில் நீங்கள் டில்லி பல்கலைக் கழகத்தில் இருந்து பிஏ பட்டமும் எம் ஏ பட்டமும் பெற்றதாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் நீங்களோ அல்லது உங்கள் அரசோ ஏன் அதற்கான சான்றிதழை வெளியிட தயங்குகிறீர்கள்? இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எழுப்பப் பட்ட கேள்விகளுக்கும் பதில் கிடைப்பதில்லை. உடடனடியாக நீங்கள் ஏன் உங்கள் பட்ட சான்றிதழை வெளியிடக்கூடாது?

15. உங்களுடைய பல விமர்சனங்கள் மிகவும் தவறான வார்த்தைகளுடன் அமைந்துள்ளது. உதாரணமாக நீங்கள் சோனியா காந்தியை காங்கிரஸ் விதவை என குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த தாக்குதல் ராகுல் மற்றும் சோனியாவை குறித்து மட்டுமின்றி ராஜிவ், இந்திரா அவ்வளவு ஏன் நேருவை குறித்தும் கூறி வருகிறீர்கள். அது மட்டுமின்றி காங்கிரஸ் தலைவர் சசிதரூரை 50 கோடி மதிப்புள்ள காதலியை கொண்டவர் என கூறி உள்ளீர்கள். இது போல நீங்கள் ஏன் கருத்துக்களை சொல்கிறீர்கள்? ஒரு பிரதமர் என்னும் முறையில் உங்கள் வார்த்தைகள் கீழ்த்தரமாக உள்ளதை நீங்கள் அறிவீர்களா?

என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.