மோடிக்கு எழுப்பப்பட்ட 15 கேள்விகள் : 7 மற்றும் 8

டில்லி

டகங்கள் பிரதமர் மோடிக்கு எழுப்பிய 15 கேள்விகள் வரிசையில் இன்று 7 மற்றும் 8

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது இல்லை. குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு தனிப்பட்ட பேட்டியில் மட்டும் அவர் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதை ஒட்டி ஊடகக்கள் அவருக்கு 15 கேள்விகள் எழுப்பி இருந்தன.

அந்த வரிசையில் இன்று 7 மற்றும் 8 ஆம் கேள்விகள் இதோ :

7. உங்களுடைய முதல் சுதந்திர தின உரையில் நீங்கள் சமுதாய சம உரிமை குறித்து 10 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சொன்னீர்கள். ஆனால் அப்படி இருந்தும் சமுதாயக் கலவரங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் வன்முறைக் கும்பல் தாக்குதல்கள் உண்டாகி 314 பேர் தாக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்ரி தலித் மற்றும் ஆதிவாசிகள் மீது நடந்த வன்முறைக் கும்பல் தாக்குதலில் 39 பேர் தாக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சங்க அமைப்பினர் உள்ளிட்ட பலரும் இன வேற்றுமைக்கு ஆதரவாக தினமும் பேசி வருகின்றனர். இத்தகைய பேச்சுக்களுக்காக 80 ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என கடிதம் எழுதி உள்ளனர். ஆனால் நீங்கள் ஏன் இந்தியக் குடிமக்கள் மீது உங்கள் கட்சியினர் இனத் தாக்குதல் நடத்தும் போது வன்முறை கும்பலால் அடித்துக் கொல்லப்படும் போதும் அமைதியாக இருந்தீர்கள் ? தலித்துகள் உனா பகுதியில் தாக்கப்பட்ட போது அதை கண்டித்த நீங்கள் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட போது ஏன் அதை கண்டிக்கவில்லை?

8. கடந்த 2015 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி நீங்கள் 36 ரபேல் ரக விமானங்களை வாங்க உள்ளதாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அறிவித்தீர்கள். ஆனால் பாதுகாப்புத் துறை கொள்முதல் வழிமுறைப்படி இந்த அறிவிப்புக்கு முன்னமே இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் அரசு உச்சநீதிமன்றத்துக்கு அது குறித்த எந்த ஆவணமும் அளிக்கவில்லை. அந்த அவணங்களில் நீங்கள் இந்தியாவுக்கு திரும்பிய பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து மட்டுமே காணபடுகிறது. எனவே நீங்கள் உங்கள் அறிவிப்புக்கு முன்பு நடந்த நடவடிக்கைகள் குறித்து விவரம் அளிக்க முடியுமா? நீங்கள் இந்தியாவில் தயாரிப்போம் என்னும் உங்கள் கொள்கை முடிவை மாற்றிக் கொண்டு தொழில் நுட்பம் பெற மட்டும் எதற்கு மூன்று மடங்கு தொகை அளிக்க ஒப்புக்கொண்டீர்கள்?

அடுத்த கேள்விகளை நாளை காண்போம்.