அமெரிக்காவில் பிஹெச்.டி படிப்பை தொடங்கும் 15 வயது கேரளா சிறுவன்

வாஷிங்டன்:

அமெரிக்காவில் வாழும் 15 வயது கேரளா சிறுவன் பிஹெச்.டி படிப்பை தொடங்கவுள்ளார்.

கேரளாவை சேர்ந்த பிஜூ ஆப்ரஹாம், தாஜி தம்பதியினர் வாஷிங்டன்னில் வசித்து வருகின்றனர். இவர்களின் 15 வயது மகன் தனிஷ் ஆப்ரஹாம், கலிபோர்னியா பல்கலைகழகத்தில் பயோ மெடிக்கல் என்ஜினியரிங் படிப்பில் பட்டம் பெற்றார்.

மேலும் இவர் தீ விபத்தில் பாதிக்கப்படும் நோயாளிகளை தொடாமலேயே அவர்களின் இதய துடிப்பபை கண்டறியும் செயல்பாட்டை கண்டுபிடித்துள்ளார்.

புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை, நோயை சரி செய்வதற்கான வழி முறை குறித்து பிஹெச்டி பட்டம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 5 ஆண்டில் எம்.டி. படிப்பை தனிஷ்க் ஆப்ரஹாம் தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.