பெங்களூரு:

18வயது காதலனுடன் சேர்ந்து, தொழிலதிபர் தந்தையை எரித்துகொன்று நாடகமாடிய 15வயது மகள், காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

தொழிலதிபர் ஒருவர் தனது 15வயது மகளின் காதலை கண்டித்த நிலையில், தனது காதலுடன் சேர்ந்து பெற்ற தந்தையையே கொலை செய்து தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், அது  தற்செயலான மரணம் என கூறினர். ஆனால், விசாரணையில் அது கொலை என தெரிய வந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு ராஜாஜி நகர் பாஷ்யம் சர்க்கிள் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜெயக்குமார் ஜெயின் (வயது 41). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், தற்போது பெங்களூரில் ரெடிமேட் துணிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு 15வயதில் மகள் உள்ளார். அவருக்கு 18 வயதான காதலன் ஒருவரும் உள்ளார். இது குறித்து அறிந்த தொழிலதிபர், மகளின் காதலை ஏற்க மறுத்து கண்டித்துள்ளார்.

இந்த நிலையில், தொழிலதிபர் வீட்டில் உள்ள பாத்ரூமில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. தொடக்கத்தில் இதை சாதாரணமாக காவல்துறையினர் எண்ணிய நிலையில், அவரது உடலில் இருந்த ரத்தக்காயம் காரணமாக, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கண்டனர். விசாரணையில்,  தொழிலதிபரை அவரது 15வயது மகளே தனது 18வயது காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கூறிய காவல்துறை அதிகாரி,  சமீபத்தில் மால் தனது மகள் அவரது காதலுடன் ஒன்றில‘ இருப்பதை கண்டு எச்சரித்ததாகவும், தனது மகளை விட்டு அகன்று செல்லும்படி அவரை அச்சிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் காதல் தொடர்ந்த நிலையில் தந்தை யின் எச்சரிக்கையால் கோபமடைநத் மகள், காதலன் உதவியுடன் பெற்ற தந்தையை காலி செய்ய திட்டம் தீட்டி உள்ளார்.

சம்பவத்தன்று தொழிலதிபரின் மனைவி மற்றும் மகன் தமிழகத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது, மகளின் காதலனை வீட்டுக்கு வரழைத்த தொழிலதிபர் மகள், தனது தந்தைக்கு பாலில் மயக்க மாத்திரை கொடுத்து, அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, அவரது உடலை  பாத்ரூமிற்குள் தூக்கிச்சென்று தீ வைத்து கொளுத்தி உள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து, பாத்ரூமில் இருந்து  புகை வருவதாக கூறி அக்கம் பக்கத்தினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது, தொழிலதிபர் உடல் ஓரளவு எரிந்த நிலையில், அவரது உடலில் ரத்தக்காயங்கள் இருப்பதை கண்டனர்.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், காதலர்களிடம்  நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையின் போது, அவர்கள் முரண்பட்ட தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் நடத்திய விசாரணையில், தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்,அவரை கொலை செய்ததாக கூறி உள்ளனர்.

பெற்ற தந்தையையே, காதலுக்காக 15வயது மகள் கொலை செய்தது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.