உலகளவில் இதுவரை சுமார் 150 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ள ‘பிகில்’….!

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியுள்ள படம் பிகில் .ரிலீஸான சில மணிநேரத்திலேயே அது தமிழ் ராக்கர்ஸில் கசிந்துவிட்டது.180 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது.

தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் சுமார் 83 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

விமர்சன ரீதியாகக் சற்றே தொய்வு இருந்தாலும், வசூல் ரீதியாகப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

உலகளவில் 3 நாட்களில் மொத்த வசூலில் 100 கோடியைத் தாண்டியது ‘பிகில்’.அதுமட்டுமன்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நல்ல வசூல் செய்துள்ளது. உலகளவில் இதுவரை சுமார் 150 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.

கார்ட்டூன் கேலரி