திபெத் கனமழையில் 150 இந்தியர்கள் சிக்கி தவிப்பு

கெய்ரின்

திபெத்தில் ஏற்பட்ட கனமழையால் சாலை துண்டிக்கப்பட்டு 90 தமிழர்கள் உள்ளிட்ட 150 இந்தியர்கள் சிக்கி தவிக்கின்றனர்.

கைலாஷ் யாத்திரைக்காக இந்தியர்கள் பெருமளவில் திபெத் பகுதியில் அமைந்துள்ள இமயமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம்.    அவ்வகையில் 90 தமிழர்களும் 60 கேரளாவை சேர்ந்தவர்களும் திபெத்துக்கு யாத்திரை சென்றுள்ளனர்.    அங்கு தற்போது கனமழை பெய்து வருகிறது.

கனமழையின் காரணமாக திபெத்தில் உள்ள பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.   அதனால் அந்த 150  இந்தியர்களும் திபெத்தில் உள்ள கெய்ரின் என்னும் பகுதியில் சிக்கி உள்ளனர்.   சாலை துண்டிப்பால் உணவு மற்றும் குடிநீரும் இன்றி அவர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த தகவல் அறிந்த அவர்களின் உறவினர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.  உடனடியாக யாத்திரிகர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி உறவினர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You may have missed