ரியாத்:
 
வுதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஜிஸ் (Saudi Prince Faisal bin Bandar bin Abdulaziz Al Saud) கொரோனாவால் பாதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அரேபிய நாடான சவூதி அரேபியாவையும் விட்டு வைக்கவில்லை. இங்கு 2,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கையும், 41 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா வைரஸ், அந்நாட்டு ராயல் பேமிலியான அரச குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கு இளவரசர் அப்துல் அஜிஸ் மற்றும், மன்னர் சல்மானின் மருமகனுமான பைசல் பின் பந்தர் அப்துல் அஜிஸ்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதையடுத்து,  சவுதி மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் தாங்களாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அரச குடும்பத்தில்150 பேருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அந்நாட்டில் இருந்து வெளியாகும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து, சவூதி அரேபியாவின்  ரியாத், ஜித்தா, மெக்கா உள்ளிட்ட பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.