ர்சிலோனா

காடலோனியா பகுதி சுதந்திரப் போராட்டத்தால் 1500 நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளன

காடலோனியா பகுதி ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் பெற்று தனி நாடாக போராடி வருகிறது.  சமீபத்தில் இதற்கான கருத்துக் கணிப்பு தேர்தலின் போது ஸ்பெயின் போலிசாரால் கடும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.   ஆயினும் வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் காடலோனியா சுதந்திர நாடாக விருப்பம் தெரிவித்தனர்.  இதையொட்டி இந்த தேர்தலை செல்லாது என ஸ்பெயின் நீதிமன்றம் அறிவித்தது.

தொடர்ந்து காடலோனியாவில் போராட்டங்கள் நடைபெறுவதால் இந்த பகுதி எங்கும் பரபரப்பு நிலவி வருகிறது.   இதையொட்டி பல வர்த்தக நிறுவனங்கள் அச்சத்தின் காரணமாக காடலோனியாவை விட்டு வெளியேறி வருகின்றன.    அக்டோபர் 2 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 24 ஆம் தேதிவரை மொத்தம் 1501 நிறுவனங்கள் வெளியேறியதாக தகவல்கள் வந்துள்ளன.   கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் 107 நிறுவனங்கள் வெளியேரி உள்ளன.