சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை எதிர்கொள்ளும் வகையில், சென்னை நகரில் மொத்தம் 15,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, ஆங்கிலப் புத்தாண்டு, ஒவ்வொரு முறையும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை பேன்ற பெருநகரங்களில் இதைப்பற்றி கேட்கவே வேண்டாம்.

சாதாரண வகை கொண்டாட்டம் முதல், நட்சத்திர விடுதிகளில் மதுபான விருந்துவரை கொண்டாட்டங்கள் களைக் கட்டும். இந்தப் புத்தாண்டு சமயத்தில், வாகன விபத்துகளுக்கும் பஞ்சமிருக்காது. இதில் சிலர் மரணமடையும் சம்பவங்களும் உண்டு.

எனவே, இந்தாண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் எந்தக் குறையுமின்றி களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நட்சத்திர விடுதிகளில் நடைபெறும் கேளிக்கை விருந்துகளுக்கு காவல்துறையினர் வழக்கம்போல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

சாலைப் போக்குவரத்து மற்றும் மெரினா, ஆலயங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த என்று, மொத்தமாக சென்னையில் மட்டும் 15000 காவல்துறையினர் களத்தில் இறக்கவிடப்படவுள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.