சென்னை:

காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, காந்தியன் உருவப்படத்துக்கு தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள்  மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தில்  சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலையின் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தி படத்துக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


அதன்பின், சென்னை சர்வோ தயா சங்கத்தினர் நடத்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சி யில் ஆளுநர், முதல்வர், அமைச் சர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக தீண்டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, உலக அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி நடைபெற்ற சைக்கிள் பேரணியை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தொடங்கி வைத்தார்.

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் சிறப்பு தபால் தலையை தலைமை தபால் துறைத் தலைவர் எம்.சம்பத் வெளியிட்டார்.\