புதாபி

ம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அமீரக அதிபர் ஷேக் காலிஃபா பின் ஸயெத் அலி நயன் 1511 கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து விடுவித்துள்ளார்.

அமீரகத்தில் பல நாட்டைச் சேர்ந்த கைதிகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நடைபெறுகிறது.

ரம்ஜானை முன்னிட்டு அமீரகத்தில் உள்ள கைதிகளில் 1511 பேர் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ரம்ஜான் மாதம் புனித மாதம் என்பதால் விடுவிக்கப்படும் கைதிகளுக்குப் பொருளாதார உதவிகளும் அளிக்கப்பட உள்ளது.

இந்த தகவல்களை அமீரக அதிபர் ஷேக் காலிஃபா பின் ஸயெத் அலி நயன் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பையொட்டி மற்றொரு அரபு நாடான அஜ்மான் நாட்டில்124 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை அஜ்மான் நாட்டின் ஆட்சியாளர் ஷேக் ஹுமாய்த் பின் ரஷித் அல் நுலாமி அறிவித்துள்ளார்.