இன்று 1515 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 48,019 ஆக உயர்வு…

சென்னை:

மிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 1515 பேருக்கு புதிதாக தொற்று பரவியுள்ள நிலையில், இதுவரை, 48, 019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 919 பேர் பாதிக்கப்பட்டனர்.

இன்று 1,438 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததைத் தொடர்ந்து,  இதுவரை  குணமடைந்தோர் எண்ணிக்கை  26,782  ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு  எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 61 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

19,242 மாதிரிகள் இன்று சோதனை செய்யப்பட்டன. 20,706 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.