1538 மெகவாட் சோலார் மின் தகடுகள் அமைப்பு : இந்தியாவின் வரலாற்று சாதனை

டில்லி

ந்த ஆண்டு 1538 மெகவாட் திறனுக்கு சோலார் மின் தகடுகள் அமைத்து இந்தியா வரலாற்று சாதனை புரிந்துள்ளது.

புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மூலம் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது.   இவ்வரிசையில் சோலார் மின் தகடுகள் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் தகடுகள அமைப்பது முதல் இடத்தில் உள்ளன.

வருடத்தில் 80% நாட்களுக்கு மேல் வெயில் உள்ளதால் இந்தியாவில் அதிக அளவில் மின் உற்பத்தி செய்ய முடியும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   ஆகவே ஒவ்வொரு வருடமும் சூரிய ஒளி மின் தகடுகள் அமைப்பது அதிகரித்து வருகின்றது.

இதில் இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதி வரையிலான 12 மாத காலத்தில் 1538 மெகவாட் திறனுக்கு சோலார் மின் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.   வரலாற்றில் இந்த அளவு தகடுகள் பொருத்தப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

சோலார் மின் தகடுகள் அமைப்பது சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 75% உயர்ந்துள்ளது.    இதனால் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது 3399 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது.    விரைவில் இது மேலும் அதிகரித்து வரும் 2022 ல் 15.3 கிகாவாட் அளவுக்கு உயரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.