2 மாதங்களில் சென்னையில் 155 அரசு மருத்துவமனை செவிலியர்கள் கொரோனாவால் பாதிப்பு…

--

சென்னை:

சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கபட்டோர் எண்ணிக்கை  42,687  ஆக அதிகரித்துள்ள நிலையில் பலி எண்ணிக்கையும் 397 ஆக உயர்ந்துள்ளது. இது துவரை இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இதுவரை, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 155 செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 50 செவிலியர்கள், ஓமந்தூரார் மருத்துவமனையில் 45 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 30 செவிலியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா பாதித்த 155 அரசு மருத்துவமனை செவிலியர்களில்  135 பேர் குணமடைந்துள்ளனர்.  மேலும் 20 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

You may have missed