நாமக்கல் மாவட்டத்தில் 156 டாஸ்மாக் பார்களுக்கு சீல்!

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் ஒப்பந்தம் புதுப்பிக்காத 156 டாஸ்மாக் கடைகளுக்கு அதிகாரி கள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் டாஸ்மாக் கடையில் மது விற்பனை மூலம் வசூலாகும் தொகையில் 3 சதவீத தொகையை பார் உரிமையாளர் அரசுக்கு செலுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் டெண்டர் விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து 250-க்கும் மேற்பட்ட பார் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால், அதை தள்ளுபடி செய்துவிட்டது உயர்நீதி மன்றம்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் ஒப்பந்த காலம் முடிந்த 156 டாஸ்மாக்  பார்களுக்கு அதிகாரிகள்   சீல் வைத்துள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.