ரஷ்யாவில் 24 மணிநேரத்தில் 15,982 பேருக்கு கொரோனா தொற்று..!

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனாவில் இருந்த இதுவரை 10,75,904 பேர் குணம் பெற்றுள்ள அதே நேரத்தில் 24 மணி நேரத்தில் 15,982 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 4,03,36,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை 11,18,880 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவிலும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இந் நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,982 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,15,316 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு மேலும் 179 பேர் உயிரிழக்க, பலியானோர் எண்ணிக்கை 24,366 ஆக  உயர்ந்துள்ளது. இதுவரை 10,75,904 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னமும் 3,15,046 பேர் சிகிச்சையில் உள்ளனர்.