Random image

15வது நிதிக்குகுழு ஆலோசனைக் கூட்டம்: தமிழக நதிகளை இணைக்க நிதி கோரிக்கை

சென்னை:

என்.கே.சிங் தலைமையிலான 15-வது நிதிக்குழு ஆலோசனைக் கூட்டம்,சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வருடன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதில் தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க ரூ.7800 கோடி நிதி தேவை என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பல திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி தேவை என்றும் பட்டியலிடப்பட்டு உள்ளது.

15வது நிதிக்கமிஷன் தலைவராக செலவின மற்றும் வருவாய்த்துறையின் முன்னாள் செயலாளர் என்.கே.சிங். நியமிக்கப்பட்டுள்ளார். 2020-ம் ஆண்டு முதல் 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரவுள்ள நிலையில, இவர் தலைமையிலான குழுவினர் நாடு முழுவது ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 15வது நிதிக்குழுவினர் தமிழகம் வந்துள்ளது.  தமிழக அரசு மற்றும் அரசியல்கட்சிகளின் கருத்துகளை கேட்டறிந்து  வருகிறது. மேலும், உள்ளாட்சி சிறப்பு அலுவலர்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோரின் கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.

அதைத்தொடர்ந்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் 15-வது நிதிக்குழு உறுப்பினர்கள்  ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், தமிழக நிதிஅமைச்சரும், துணை முதல்வருமான  ஓ.பன்னிர்செல்வம், தலைமை செயலர், மூத்த அமைச்சர்கள், நிதித்துறை செயலர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த குழுவினரிடம் தமிழக அரசு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

 சென்னை பெருநகர பொருளாதார வளர்ச்சிக்கு 4,800 கோடி

வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான கோயில்களை பராமரிக்க 4000 கோடி

கடல் நீர் குடியிருப்புக்குள் செல்வதை தடுக்க 260 கோடி

உள்ளாட்சி அமைப்புகளை பராமரிப்பதற்கு 6,000 கோடி

காவிரி, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ 7800 கோடி

இதேபோல் சாலை வசதிகளை மேம்படுத்த ரூ 23,465 கோடி, உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ 6000 கோடி, வனப்பாதுகாப்புக்கு ரூ 1000 கோடி தேவை என அவர் தெரிவித்துள்ளார்.