15வது மாநகராட்சியாக தரம் உயர்ந்தது ஆவடி: தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை:

மிழகத்தில் ஏற்கனவே 14 மாநகராட்சிகள் உள்ள நிலையில், 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, நிர்வாக பணிகளுக்காக ஏற்கனவே சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், ஒசூர், ஆகிய 14 மாநகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின்  15-வது மாநகராட்சியாக ஆவடி தரம் உயர்ந்துள்ளது. ஆவடி மாநகராட்சியின் கீழ், பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்பட நகராட்சிகள் இணைக்கப்பட்டு ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தி  அறிவிக்கப்பட்டுள்ளது.