16/06/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு 34 ஆயிரத்தை தாண்டியது…மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை:
மிழகத்தில் கொரோனா  பாதிப்பு 48ஆயிரத்து 19 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  34,245 -ஆக அதிகரித்துள்ளது.
bty

தமிழகத்தில் இன்று புதிதாக 1515 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 919  சென்னையை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் அடுத்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

சென்னையில் மட்டும் 15,257 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,18,565 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அதே வேளையில், சென்னையில் இதுவரை 422 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக இன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விவரம்:

அரியலூர் 4, செங்கல்பட்டு 88, சென்னை 919, கோவை 2, கடலூர் 10, தருமபுரி 2, திண்டுக்கல் 13, ஈரோடு 1, கள்ளக்குறிச்சி 7, காஞ்சிபுரம் 46,  மதுரை 20, நாகை 38, பெரம்பலூர் 2, ராமநாதபுரம் 18,  ராணிப்பேட்டை 60, சேலம் 2, சிவங்ககை 2,  தென்காசி 13, தஞ்சாவூர் 4, தேனி 4, திருவள்ளூர் 52, திருவண்ணாமலை 64, திருவாரூர் 9, தூத்துக்குடி 1,   திருநெல்வேலி 11,  திருப்பூர் 1, திருச்சி 14, வேலூர் 16, விழுப்புரம் 18, விருதுநகர் 8.