சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.  ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களில் கொரோனா தொற்று 4 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று  ஒரே நாளில் புதிதாக 1,843  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 46,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.  தண்டையார் பேட்டையில் 4,226 பேருக்கும்,  தேனாம்பேட்டை மண்டலத்தில் இதுவரை 4,031 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும்,  15.06.2020 அன்று வரை, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 53% பேர் (17,275) குணமடைந்துள்ளனர்; இறப்பு சதவிகிதம் 1% ஆக உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.