16/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை:

மிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 4,549 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த சில நாட்களாக  சென்னையில் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், மாவட்டங்களில் தீவிரமடைந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,369  ஆக உள்ளது. . இன்று 5,106 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 1,07,416 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,157 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  82,128 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,236ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் வாரியாக விவரம்:

1.அரியலூர் 12

2.செங்கல்பட்டு 179

3.சென்னை 1157

4.கோயம்புத்தூர் 52

5.கடலூர் 22

6.தர்மபுரி 27

7.திண்டுக்கல் 126

8.ஈரோடு 8

9.கள்ளக்குறிச்சி 71

10.காஞ்சிபுரம் 67

11.கன்னியாகுமரி 146

12.கரூர் 7

13.கிருஷ்ணகிரி 21

14.மதுரை 267

15.நாகப்பட்டினம் 8

16.நாமக்கல் 18

17.நீலகிரி 44

18.பெரம்பலூர் 10

19.புதுக்கோட்டை 50

20.ராமநாதபுரம் 90

21.ராணிப்பேட்டை 145

22.சேலம் 70

23.சிவகங்கை 83

24.தென்காசி 20

25.தஞ்சாவூர் 25

26.தேனி 78

27.திருப்பத்தூர் 27

28.திருவள்ளூர் 526

29.திருவண்ணாமலை 212

30.திருவாரூர் 20

31.தூத்துக்குடி 171

32.திருநெல்வேலி 130

33.திருப்பூர் 39

34.திருச்சி 94

35.வேலூர் 253

36.விழுப்புரம் 105

37.விருதுநகர் 145

வெளிநாடு – 17உள்நாடு – 5

ரெயில் நிலைய கண்காணிப்பு – 2

மொத்தம் 4549