16/07/2020: திருவள்ளூர், வேலூர், மதுரை, நெல்லையில் கொரோனா பரவல் தீவிரமாகிறது…

சென்னை:

மிழகத்தில் கொரோனா  தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  1,51,820  ஆக உள்ளது.   கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80,961 ஆக அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 479  பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8052ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும்  192 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,652ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 212 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து,  மொத்த எண்ணிக்கை 3,559 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 320 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி  செய்யப்பட்டு உள்ளது. இதனால்  கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,651 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 3,855 பேர் குணமடைந்துள்ளனர், 3,347 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்

நெல்லை மாவட்டம்

நெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று  அதிகரித்துள்ளது. இதனால்,  வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 2,229ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம்

தேனி மாவட்டத்தில் மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியாகி உள்ளது. இதனால் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 2,110 ஆக உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று  மேலும் 18 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. ஒருவர் பலியாகி உள்ளார்.