16/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியல்…

சென்னை:

சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  1,51,820  ஆக உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 80,961 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை 64,036 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 15,606  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,318 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம் 

அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,219 பேர் சிகிச்சை – மாநகராட்சி தகவல் அண்ணாநகர் -1,574 தேனாம்பேட்டை – 1,477 ராயபுரம் -1,101 அடையார் – 1,065, திரு.வி.க.நகர் -1,059 தண்டையார்பேட்டை -957அம்பத்தூர் -930 வளசரவாக்கம் -867 * திருவெற்றியூர் – 642ஆலந்தூர் – 528மாதவரம் – 405சோழிங்கநல்லூர் -395 * பெருங்குடி – 339 மணலி -264