16/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில்  கொரோனா தொற்று பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை யும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,50,572 ஆக உள்ளது.  இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 1,37,685 பேர் குணமடைந்து உள்ள நிலையில், தற்போது,  9,883 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 3003 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று மட்டும் 12,310 பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் விவரம்:

கோடம்பாக்கம் – 1,144 பேர்

அண்ணா நகர் – 993 பேர்

தேனாம்பேட்டை – 807 பேர்

தண்டையார்பேட்டை – 588 பேர்

ராயபுரம் – 828 பேர்

அடையாறு- 827 பேர்

திரு.வி.க. நகர்- 805 பேர்

வளசரவாக்கம்- 783 பேர்

அம்பத்தூர்- 771 பேர்

திருவொற்றியூர்- 236 பேர்

மாதவரம்- 356 பேர்

ஆலந்தூர்- 599 பேர்

பெருங்குடி- 468 பேர்

சோழிங்கநல்லூர்- 357 பேர்

மணலியில் 113 பேர்.

கார்ட்டூன் கேலரி