மகாராஷ்டிராவில் தீவிரமடையும் கொரோனா: ஆளுநர் மாளிகையில் 16 பேருக்கு பாதிப்பு உறுதி

புனே: மகாராஷ்டிராவில் ஆளுநர் மாளிகையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி இருந்து வருகிறார்.  நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

காவல் துறையில் கொரோனா பாதிப்புகளால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 6  ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். புனே மாவட்டத்துக்கு உட்பட்ட 22 கிராமங்கள், பிம்ப்ரி சின்ச்வாட் பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாளை முதல் 23ம் தேதி வரை 2 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

இந் நிலையில், ஆளுநர் மாளிகையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி ஆளுநர் கோஷ்யாரி கூறியதாவது: நான் நலமுடனே இருக்கிறேன். தனிமைப்படுத்துதலில் இல்லை. கொரோனா பரிசோதனைகளில் எனக்கு எந்த பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. என்று கூறியுள்ளார்.