16 பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி? தமிழகஅரசு கவனிக்குமா?

சென்னை:

மிழகத்தில்  46 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வரும்நிலையில், அதில் பாலி டெக்னிக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு உடனடியாக முதல்வரை நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மாணவ, மாணவிகள் தரப்பில் இருந்த  வேண்டுகோள்  விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே  தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர்   பதவிகள் காலியாக உள்ள நிலையில், அதற்காக நடைபெற்ற தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம்  ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ரத்து உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.  இந்த சர்ச்சையே இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 16 கல்லூரிகளில் முதல்வர் பதவியில் காலியாக உள்ளது. இதன் காரணமாக இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது 2019-20ம் ஆண்டுக்கான கல்வியாண்டு தொடங்கிய நிலையில், மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கல்லூரி முதல்வர் பதவிகளையும்,   காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களையும் உடனடியாக நியமிக்க வேண்டும் என்று மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு கவனத்தில் கொள்ளுமா?

கார்ட்டூன் கேலரி