திருமயத்தில் 16 ஐம்பொன் சிலைகள் மீட்பு: அதிகாரிகள் ஆய்வு

திருமயம் அருகே கண்டெடுக்கப்பட்ட 16 ஐம்பொன் சிலைகளை வருவாய்த்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூர் என்கிற கிராமத்தில், முத்தையா என்பவர் வசித்து வருகிறார். தனக்கு சொந்தமான இடத்தில் வளர்ந்துள்ள தென்னை மரத்தை வெட்டியபோது, 16 சிலைகளை அவர் கண்டெடுத்துள்ளார். இது தொடர்பாக தொல்லியல் துறைக்கு முத்தையா தகவல் கொடுத்ததன் பேரில், சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு வந்த தொல்லியல் மற்றும் வருவாய் துறையினர், சிலைகளை மீட்டெடுத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.