கள்ளக்குறிச்சி:

டிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பொறுப்பு நாடு முழுவதும்  தனியா நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பணம் நிரப்பும்போது திருட்டுத்தனமாக பணத்தை அபேஸ் செய்து மோசயில் ஈடுபட்ட, தனியார் நிறுவன ஊழியர் சிக்கிக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார். இதில் ரூ.16 லட்சம் வரை கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரம்பும்போது ரூ.16 லட்சம் அளவில் பணம் கையாடல் செய்துள்ளார். ஏடிஎம் இயந்திரங்களில் பணம் குறைவாக வைக்கப்படுவதை உணர்ந்த வங்கி நிர்வாகம் அதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தது.

புகாரின்பேரில் விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர்,  ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வைக்கும்போது, கையாடல் செய்ததாக  பாபு என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ரூ.16 லட்சம் வரை அவர் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட பாபு ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். கள்ளக்குறிச்சியில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் இவர் முறைகேடு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.